Home / Abhirami Anthathi / PDF
Abhirami Anthathi PDF
Download the Abhirami Anthathi lyrics as a free printable PDF, checked against a printed edition. Every layout fits on as few pages as possible.
Free to print for personal and temple use. Choose a layout:
- Tamil, US LetterPDF 321 KB
- Tamil, A4PDF 319 KB
- English letters, US LetterPDF 221 KB
- Tamil and English lettersPDF 475 KB
- Large print (Tamil)PDF 356 KB
Or press Print on this page for the version below.
தார் அமர் கொன்றையு ம்சண்பசமாலையும் சாத்தும் தில்லை
ஊரர் தம் பாகத்து உமைமைந்த னே! உலகே ழும் பெற்ற
சீர்அபி ராமிஅந் தாதிஎப் போதும்என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதி யே! நிற்கக் கட்டுரையே.
Thaar amar konraiyu msanpasamaalaiyum saadhthum thillai
Oorar tham paagadhthu umaimaintha ne! ulage zhum perra
Seerabi raamian thaadhieb podhumen sinthaiyulle
Kaaramar menig kanabadhi ye! nirkag kadturaiye.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே.
Udhigkinra sengkadhir, ussidh thilagam, unarvudaiyor
Madhigkinra maanigkam, maadhulam podhu, malarkkamalai
Thudhigkinra minkodi, menkadig kungkuma thoyam enna
Vidhigkinra meni, abiraami enran vizhudhthunaiye.
துணையும் தொழுந் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும், பனிமலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங் குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.
Thunaiyum thozhun theyvamum, perra thaayum, surudhigalin
Panaiyum, kozhunthum, padhigonta verum, panimalarppoong
Kanaiyum, karubpussilaiyum, men paasaang kusamum, kaiyil
Anaiyum thiribura sunthari aavadhu arinthaname.
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக் கே, திருவே! வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும்நர குக்குஉற வாய மனிதரையே.
Arinthen evarum ariyaa maraiyai arinthugontu
Serinthen, unadhu thiruvadig ke, thiruve! veruvib
Pirinthen, nin anpar perumaien naadha karumanenjsaal
Marinthe vizhumnara kugkuura vaaya manidharaiye.
மனிதரும், தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமள மே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும், நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.
Manidharum, thevarum maayaa munivarum vanthu senni
Kunidharum sevadig komala me! konrai vaarsadaimel
Panidharum thingkalum, paampum, pageeradhiyum padaidhtha
Punidharum, neeyum en punthien naalum porunthugave.
பொருந்திய முப்புரை, செப்புரைசெய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சிம் மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே.
Porunthiya mubpurai, sebpuraiseyyum punarmulaiyaal
Varunthiya vanjsim marungkul manonmani, vaarsadaiyon
Arunthiya nanjsu amu thaagkiya ampigai, ampuyamel
Thirunthiya sunthari, anthari paadham en senniyadhe.
சென்னியது உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியதுஉன்திரு மந்திரம், சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி, முறைமுறையே
பன்னியது என்றும் உன் றன்பர மாகம பத்ததியே.
Senniyadhu un pon thiruvadidh thaamarai, sinthaiyulle
Manniyadhuunthiru manthiram, sinthura vannab penne!
Munniya nin adi yaarudan koodi, muraimuraiye
Panniyadhu enrum un ranpara maagama padhthadhiye.
ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண் டாய்: கம லாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய்! சிந்து ரானன சுந்தரியே!
Thadhiyuru madhthir suzhalum en aavi, thalarviladhor
Kadhiyuru vannam karudhugan taay: kama laalayanum,
Madhiyuru veni magizhnanum, maalum vanangki, enrum
Thudhiyuru sevadiyaay! sinthu raanana sunthariye!
சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தி னாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள், மலர்த் தாள்என் கருத்தனவே.
Sunthari, enthai thunaivi, en paasadh thodaraiyellaam
Vanthari sinthura vannadhthi naal, magidan thalaimel
Anthari, neeli, azhiyaadha kannigai, aaranadhthon
Kanthari kaidhthaladh thaal, malarth thaalen karudhthanave.
கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும்அம் மே! வந்து என் முன்நிற்கவே
Karudhthana, enthaidhan kannana, vannag kanagaverpil
Perudhthana, paal azhum pillaigku nalkina, per arulkoor
Thirudhthana paaramum, aaramum, sengkais silaiyum, ampum,
Murudhthana mooralum, neeyumam me! vanthu en munnirkave
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுஉன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்; எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொரு ளே, அரு ளே, உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியாமுத்தி ஆனந்தமே.
Ninrum irunthum kidanthum nadanthum ninaibpadhuunnai;
Enrum vanangkuvadhu unmalarth thaal; ezhu thaamaraiyin
Onrum arumporu le, aru le, umaiye, imayadhthu
Anrum piranthavale, azhiyaamudhthi aananthame.
ஆனந்த மாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்.
வான் அந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்த மான சரணார விந்தம், தவளநிறக்
கானம் தம் ஆடரங் காம், எம்பி ரான்முடிக் கண்ணியதே.
Aanantha maay, en arivaay, niraintha amudhamumaay.
Vaan antha maana vadivudaiyaal marai naankinugkum
Thaan antha maana saranaara vintham, thavalanirag
Kaanam tham aadarang kaam, empi raanmudig kanniyadhe.
கண்ணியது உன்புகழ், கற்றதுஉன் நாமம், கசிந்துபத்தி
பண்ணியது உன்இரு பாதாம் புயத்தில், பகல்இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான்முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே, புவி ஏழையும் பூத்தவளே
Kanniyadhu unpugazh, karradhuun naamam, kasinthubadhthi
Panniyadhu uniru paadhaam puyadhthil, pagaliravaa
Nanniyadhu unnai nayanthor avaiyadhthu; naanmunseytha
Punniyam edhu? en amme, puvi ezhaiyum poodhthavale
பூத்தவளே, புவ னம்பதி னான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே; கறைக் கண்டனுக்கு
மூத்தவளே; என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே:
மாத்தவ ளே,உன்னை அன்றிமற் றோர் தெய்வம் வந்திப்பதே;
Poodhthavale, puva nampadhi naankaiyum; poodhthavannam
Kaadhthavale, pin karanthavale; karaig kantanugku
Moodhthavale; enrum moovaa muguntharku ilaiyavale:
Maadhthava le,unnai anrimar ror theyvam vanthibpadhe;
வந்திப் பவர் உன்னை, வானவர் தானவ ரானவர்கள்;
சிந்திப்பவர், நல் திசைமுகர் நாரணர்; சிந்தையுள்ளே
பந்திப் பவர், அழி யாப்பர மானந்தர்; பாரில்உன்னைச்
சந்திப் பவர்க்குஎளி தாம் எம்பி ராட்டிநின் தண்ணளியே.
Vanthib pavar unnai, vaanavar thaanava raanavarkal;
Sinthibpavar, nal thisaimugar naaranar; sinthaiyulle
Panthib pavar, azhi yaabpara maananthar; paarilunnais
Santhib pavarkkueli thaam empi raadtinin thannaliye.
தண்ணளிக்கு என்று முன் னேபல கோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக் கும் செல்வ மோபெறுவார்? மதி வானவர்தம்
விண்ணளிக் கும்செல்வமும், அழி யாமுத்தி வீடும், அன்றோ?
பண்ணளிக் கும்சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.
Thannaligku enru mun nebala kodi thavangkal seyvaar,
Mannalig kum selva moberuvaar? madhi vaanavartham
Vinnalig kumselvamum, azhi yaamudhthi veedum, anro?
Pannalig kumsor parimala yaamalaib paingkiliye.
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே, வெளிமுதற் பூதங்க ளாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவள விற்கு அள வானது அதிசயமே!
Kiliye, kilainjar manadhthe kidanthu kilarnthu olirum
Oliye, olirum oligku idame, ennil onrumillaa
Veliye, velimudhar poodhangka laagi virintha amme!
Aliyen arivala virku ala vaanadhu adhisayame!
அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி
பதிசய மானது அபசய மாக, முன் பார்த்தவர் தம்
மதிசய மாக அன்றோ, வாமபாகத்தை வவ்வியதே.
Adhisaya maana vadivudai yaal, ara vinthamellaam
Thudhisaya aanana sunthara valli, thunai iradhi
Padhisaya maanadhu abasaya maaga, mun paartthavar tham
Madhisaya maaga anro, vaamabaagadhthai vavviyadhe.
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்துஎன்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து,
வெவ்விய காலன்என் மேல்வரும் போது வெளிநிற்கவே.
Vavviya paagadhthu iraivarum neeyum magizhnthirugkum
Sevviyum, ungkal thirumanag kolamum, sinthaiyulle
Avviyam theertthuennai aantabor paadhamum aagivanthu,
Vevviya kaalanen melvarum podhu velinirkave.
வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட துஇல்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது; என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
Velininra ninthiru meniyaib paartthu, en vizhiyum nenjsum
Kalininra vellam karaiganta thuillai; karudhthinulle
Thelininra njaanam thigazhkinradhu; enna thiruvulamo?
Olininra konangkal onpadhum mevi uraibavale.
உறைகின்ற நின்திருக் கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ,
அறைகின்ற நான்மறை யின் அடியோ, முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ, கஞ்சமோ, நின்றன்நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே!
Uraiginra ninthirug koyilnin kelvar orubagkamo,
Araiginra naanmarai yin adiyo, mudiyo, amudham
Niraiginra venthingkalo, kanjsamo, ninrannenjsagamo,
Maraiginra vaaridhiyo? pooranaasala mangkalaiye!
மங்கலை, செங்கல சம்முலை யாள், மலையாள், வருணச்
சங்குஅலை செங்கைச் சகல கலாமயில், தாவுகங்கை
பொங்குஅலை தங்கும் புரிசடை யோன்புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும்பெண்கொடியே.
Mangkalai, sengkala sammulai yaal, malaiyaal, varunas
Sangkualai sengkais sagala kalaamayil, thaavugangkai
Pongkualai thangkum purisadai yonpudaiyaal, udaiyaal
Pingkalai, neeli, seyyaal, veliyaal, pasumpenkodiye.
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்குவம் பேபழுத்த
படியே, மறையின் பரிமள மே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்துஇங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே
Kodiye, ilavanjsig kompe, enagkuvam pebazhudhtha
Padiye, maraiyin parimala me, pani maal imayab
Pidiye, piraman mudhalaaya thevaraib perra amme!
Adiyen iranthuingku inib piravaamal vanthu aantugolle
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசம யம்விரும் பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக் கும்புறம்பே, உள்ளத் தே-விளைந்த
கள்ளே, களிக்குங் களியே, அளியஎன் கண்மணியே!
Kollen manadhthil ninkolam allaadhu, anpar koodtanthannai
Villen, parasama yamvirum pen; viyan moovulagugku
Ulle, anaidhthinug kumpurampe, ulladh the-vilaintha
Kalle, kaligkung kaliye, aliyaen kanmaniye!
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே
Maniye, maniyin oliye, olirum manibunaintha
Aniye, aniyum anigku azhage, anugaadhavarkkub
Piniye, pinigku marunthe, amarar peruvirunthe,
Paniyen oruvarai ninpadhma paadham paninthabinne
பின்னே திரிந்து, உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க,
முன்னே தவங்கள் முயன் றுகொண்டேன்; முதல்மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே, இனி உன்னை யான் மறவாமல்நின்று ஏத்துவனே.
Pinne thirinthu, un adiyaaraibpenib pirabparugka,
Munne thavangkal muyan rugonten; mudhalmoovarugkum
Anne! ulagugku abiraami ennum arumarunthe!
Enne, ini unnai yaan maravaamalninru edhthuvane.
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினை யும்படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவ ராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங் கே, மணம் நாறும்நின் தாளிணைக்குஎன்
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே.
Edhthum adiyavar, eerezh ulaginai yumpadaidhthum
Kaadhthum azhidhthum thiribava raam; kamazh poongkadampu
Saadhthum kuzhal anang ke, manam naarumnin thaalinaigkuen
Naadhthangku punmozhi eriya vaaru nagaiyudaidhthe.
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணிஎனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம்நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி!நின் அருள் ஏதென்று சொல்லுவதே
Udaidhthanai vanjsab piraviyai, ullam urugum anpu
Padaidhthanai, padhma padhayugam soodum panienagke
Adaidhthanai, nenjsadhthu azhugkaiyellaamnin arudpunalaal
Thudaidhthanai, sunthari!nin arul edhenru solluvadhe
சொல்லும் பொருளும் என,நட மாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடி யே! நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க் கே, அழி யா அரசும்,
செல்லும் தவநெறி யும், சிவ லோகமும் சித்திக்குமே.
Sollum porulum ena,nada maadum thunaivarudan
Pullum parimalab poongkodi ye! nin pudhumalartthaal
Allum pagalum thozhumavark ke, azhi yaa arasum,
Sellum thavaneri yum, siva logamum sidhthigkume.
சித்தியும், சித்தி தரும்தெய்வமு மாகித், திகழும்பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம்முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித் தாகி முளைத் தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
Sidhthiyum, sidhthi tharumtheyvamu maagidh, thigazhumparaa
Sadhthiyum, sadhthi thazhaigkum sivamum, thavammuyalvaar
Mudhthiyum, mudhthigku vidhthum, vidh thaagi mulaidh thezhuntha
Pudhthiyum, pudhthiyinulle puragkum puradhthai anre.
அன்றேதடுத்துஎன்னை ஆண்டுகொண்டாய்,கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு?இனி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற் றுகைநின் திருவுளமே!
ஒன்றே, பல உருவே அரு வேஎன் உமையவளே.
Anredhadudhthuennai aantugontaay,kontadhu alla enkai
Nanre unagku?ini naan en seyinum, nadugkadalul
Senre vizhinum, karaiyer rugainin thiruvulame!
Onre, pala uruve aru veen umaiyavale.
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்து, இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத் தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும்இல்லை ;
அமையும், அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.
Umaiyum, umaiyoru paaganum ega uruvilvanthu, ingku
Emaiyum thamagku anpu seyyavaidh thaar; ini ennudharkus
Samaiyangkalum illai, eenredubpaal oru thaayumillai ;
Amaiyum, amaiyuru tholiyar melvaidhtha aasaiyume.
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தால் அல்லல் படஇருந் தேனை, நின் பாதம்என்னும்
வாசக்கமலம்தலைமேல் வலியவைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என்சொல்லுகேன்? ஈசர் பாகத்து நேரிழையே.
Aasaig kadalil agabpadtu, arularra anthagan kaib
Paasadhthaal allal padairun thenai, nin paadhamennum
Vaasagkamalamthalaimel valiyavaidhthu, aantu konta
Nesadhthai ensollugen? eesar paagadhthu nerizhaiye.
இழைக்கும் வினைவழி யே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது, வந்து அஞ்சல்என் பாய், அத்தர்சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
Izhaigkum vinaivazhi ye adum kaalan, enai nadungka
Azhaigkum pozhudhu, vanthu anjsalen paay, adhtharsidhthamellaam
Kuzhaigkum kalabag kuvimulai yaamalaig komalame!
Uzhaigkumpozhudhu, unnaiye annaiye enpan odivanthe.
வந்தே சரணம் புகும்அடி யாருக்கு, வானுலகம்
தந்தே, பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும், பாகமும் பொற்
செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.
Vanthe saranam pugumadi yaarugku, vaanulagam
Thanthe, parivodu thaanpoy irugkum sadhurmugamum,
Painthen alangkar parumani aagamum, paagamum por
Senthen malarum, alarkadhir njaayirum thingkalume.
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வா? எண் ணிறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங் கக்கடலுள்
வெங்கட் பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.
Thingkad pagavin manamnaarum seeradi sennivaigka
Engkadku orudhavam eythiya vaa? en niranthavinnor
Thangkadkum inthadh thavam eythumo? tharang kagkadalul
Vengkad pani anai melthuyil koorum vizhubporule.
பொருளே, பொருள்முடிக் கும்போகமே, அரும்போகம் செய்யும்
மருளே, மருளில் வரும்தெரு ளே, என் மனத்துவஞ்சத்(து)
இருள்ஏதும் இன்றி ஒளிவெளி யாகிஇருக்கும் உன்றன்
அருள்ஏது?அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.
Porule, porulmudig kumpogame, arumpogam seyyum
Marule, marulil varumtheru le, en manadhthuvanjsadh(thu)
Iruledhum inri oliveli yaagiirugkum unran
Aruledhu?ariginrilen, ampuyaadhanadhthu ampigaiye.
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும்; எட்டுத்
திக்கே அணியும் திருவுடை யானிடம் சேர்பவளே.
Kaigke anivadhu kannalum poovum; kamalam anna
Meykke anivadhu venmudhthu maalai; vidaaravin
Paigke anivadhu panmanig kovaiyum, padtum; edtudh
Thigke aniyum thiruvudai yaanidam serpavale.
பவளக் கொடியிற் பழுத்தசெவ் வாயும், பனி முறுவல்
தவளத் திருநகை யும்துணை யா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
Pavalag kodiyir pazhudhthasev vaayum, pani muruval
Thavaladh thirunagai yumthunai yaa, engkal sangkaranaidh
Thuvalab porudhu, thudiyidai saaykkum thunaimulaiyaal
Avalaib panimin kanteer amaraavadhi aalugaigke.
ஆளுகைக்கு, உன்றன் அடித்தா மரைகள் உண்டு; அந்தகன் பால்
மீளுகைக்கு, உன்றன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு, என்குறையே நின்குறை அன்று: முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்பு தொடுத்தவில் லான்பங்கில் வாணுதலே!
Aalugaigku, unran adidhthaa maraigal untu; anthagan paal
Meelugaigku, unran vizhiyin kadaiuntu; mel ivarrin
Moolugaigku, enkuraiye ninkurai anru: mubpurangkal
Maalugaigku, ampu thodudhthavil laanpangkil vaanudhale!
வாள்நுதற் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெரு மாட்டியைப், பேதைநெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக்,காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம்அன்றோ, முன்செய் புண்ணியமே!
Vaalnudhar kanniyai, vinnavar yaavarum vanthu irainjsib
Penudharku enniya emperu maadtiyaib, pedhainenjsil
Kaanudharku anniyal allaadha kanniyaig,kaanum anpu
Poonudharku enniya ennamanro, munsey punniyame!
புண்ணியம் செய்தன மே,மன மே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணிஇங் கேவந்து, தம் அடி யார்கள் நடுஇருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேற்பத்ம பாதம் பதித்திடவே.
Punniyam seythana me,mana me! pudhub poongkuvalaig
Kanniyum seyya kanavarum koodi, nam kaaranadhthaal
Nanniing kevanthu, tham adi yaarkal naduirugkab
Panni, nam senniyin merpadhma paadham padhidhthidave.
இடம்கொண்டு விம்மி,இணை கொண்டுஇறுகி,இளகி,முத்து
வடம்கொண்டகொங்கைமலைகொண்டு,இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி,நல்லரவின்
படங்கொண்ட அல்குற் பனிமொழி வேதப் பரிபுரையே.
Idamkontu vimmi,inai kontuirugi,ilagi,mudhthu
Vadamkontagongkaimalaigontu,iraivar valiya nenjsai
Nadangkonta kolkai nalangkonta naayagi,nallaravin
Padangkonta alkur panimozhi vedhab pariburaiye.
பரிபுரச் சீறடிப் பாசாங் குசை, பஞ்ச பாணி, இன் சொற்
றிரிபுர சுந்தரி, சிந்துர மேனியள், தீமை நெஞ்சிற்
புரிபுர வஞ்சரை யஞ்சக் குனி பொருப் புச்சிலைக்கை
எரிபுரை மேனி யிறைவர்செம் பாகத் திருந்தவளே.
Pariburas seeradib paasaang kusai, panjsa paani, in sor
Riribura sunthari, sinthura meniyal, theemai nenjsir
Puribura vanjsarai yanjsag kuni porub pussilaigkai
Eriburai meni yiraivarsem paagadh thirunthavale.
தவளே இவள், எங்கள் சங்கர னார்மனை மங்கலமாம்
அவளே அவர்தமக் கன்னையு மாயினள்; ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கு மேலை யிறைவியுமாம்;
துவளேன் இனியொரு தெய்வமுண் டாகமெய்த் தொண்டுசெய்தே.
Thavale ival, engkal sangkara naarmanai mangkalamaam
Avale avarthamag kannaiyu maayinal; aagaiyinaal
Ivale kadavular yaavarkku melai yiraiviyumaam;
Thuvalen iniyoru theyvamun taagameyth thontuseythe.
தொண்டுசெய் யாதுநின் பாதந் தொழாது துணிந்திச்சையே
பண்டுசெய் தாருள ரோ? இல ரோ? அப்பரிசடியேன்
கண்டுசெய் தாலது கைதவ மோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டுசெய் தாலும் பொறுக்கைநன் றேபின் வெறுக்கையன்றே.
Thontusey yaadhunin paadhan thozhaadhu thuninthissaiye
Pantusey thaarula ro? ila ro? abparisadiyen
Kantusey thaaladhu kaidhava mo? anris seythavamo?
Mintusey thaalum porugkainan rebin verugkaiyanre.
வெறுக்குந் தகைமைகள் செய்யினுந் தம்மடி யாரை மிக்கோர்
பொறுக்குந் தகைமை புதியதன் றே ! புது நஞ்சையுண்டு
கறுக்குந் திருமிடற் றானிடப் பாகங் கலந்த பொன்னே !
மறுக்குந் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.
Verugkun thagaimaigal seyyinun thammadi yaarai migkor
Porugkun thagaimai pudhiyadhan re ! pudhu nanjsaiyuntu
Karugkun thirumidar raanidab paagang kalantha ponne !
Marugkun thagaimaigal seyyinum yaanunnai vaazhtthuvane.
வாழும் படியொன்று கண்டுகொண்டேன்;மனத் தேயொருவர்
வீழும் படியன்று, விள்ளும் படியன்று; வேலைநிலம்
ஏழும் பருவரை யெட்டுமெட் டாம லிரவுபகல்
சூழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.
Vaazhum padiyonru kantugonten;manadh theyoruvar
Veezhum padiyanru, villum padiyanru; velainilam
Ezhum paruvarai yedtumed taama liravubagal
Soozhunj sudarkku naduve kidanthu sudarkinradhe.
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து, நெஞ்சில்
இடரும் தவிர்த்துஇமைப்போதுஇருப் பார், பின்னும் எய்துவரோ?
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
Sudarum kalaimadhi thunrum sadaimudig kunrilonrib
Padarum parimalab passaig kodiyaib padhidhthu, nenjsil
Idarum thavirtthuimaibpodhuirub paar, pinnum eythuvaro?
Kudarum kozhuvum kurudhiyum thoyum kurampaiyile.
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெம் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப் போது, வளைக்கை அமைத்து,
அரம்பை யடுத்த அரிவையர் சூழவந்து, 'அஞ்சல்' என்பாய்
நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே.
Kurampai adudhthug kudibugka aavi, vem koorrugku idta
Varampai adudhthu marugum ab podhu, valaigkai amaidhthu,
Arampai yadudhtha arivaiyar soozhavanthu, 'anjsal' enpaay
Narampai adudhtha isaivadi vaayninra naayagiye.
நாயகி, நான்முகி, நாரா யணி, கைந் நளினபஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்(று)
ஆய கியாதி யுடையாள் சரணம்,அரண்நமக்கே.
Naayagi, naanmugi, naaraa yani, kain nalinabanjsa
Saayagi, saampavi, sangkari, saamalai, saadhi nassu
Vaay agi maalini, vaaraagi, soolini, maadhangki en(ru)
Aaya kiyaadhi yudaiyaal saranam,arannamagke.
அரணம் பொருள்என்று, அருள்ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்தபெம் மானும், முகுந்தனுமே
'சரணம் சரணம்' என நின்ற நாயகி, தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும்எய் தார்இந்த வையகத்தே.
Aranam porulenru, arulonru ilaadha asurar thangkal
Muran anru azhiya muninthabem maanum, mugunthanume
'saranam saranam' ena ninra naayagi, than adiyaar
Maranam piravi irantumey thaarintha vaiyagadhthe.
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை,
பெய்யுங் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனை யாள், அடித் தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவமுடை யார்க்கு, உளவாகிய சின்னங்களே.
Vaiyam, thuragam, madhagari, maamagudam, sivigai,
Peyyung kanagam, peruvilai aaram, piraimudidhtha
Aiyan thirumanai yaal, adidh thaamaraigku anpumunpu
Seyyum thavamudai yaarkku, ulavaagiya sinnangkale.
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங் கரிய குழலும், கண் மூன்றும்,கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப் பார்க்கு, இதுபோலும் தவம் இல்லையே.
Sinnanj siriya marungkinil saadhthiya seyya padtum,
Pennam periya mulaiyum, mudhthaaramum, pissi moyttha
Kannang kariya kuzhalum, kan moonrum,karudhthil vaidhthudh
Thannanthani irub paarkku, idhubolum thavam illaiye.
இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த, திரிபுரை பாதங்கள் சேர்மின் களே.
Illaamai solli oruvar tham paal senru, izhivubadtu
Nillaamai nenjsil ninaiguvirel, nidhtham needudhavam
Kallaamai karra kayavar tham paal oru kaaladhthilum
Sellaamai vaidhtha, thiriburai paadhangkal sermin kale.
மின் ஆயிரம்ஒரு மெய்வடி வாகி விளங்குகின்றது
அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடுஎங்கு மாய், முடி வாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.
Min aayiramoru meyvadi vaagi vilangkuginradhu
Annaal, agamagizh aananthavalli, arumaraigku
Munnaay, naduengku maay, mudi vaaya mudhalvidhannai
Unnaadhu ozhiyinum unninum ventuvadhu onrillaiye.
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து, இவ் உலகுஎங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கிநிற்பாள்; என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்ற வா! இப் பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.
Onraay arumpib palavaay virinthu, iv ulaguengkumaay
Ninraal, anaidhthaiyum neengkinirpaal; enran nenjsinulle
Ponraadhu ninru puriginra vaa! ib porul arivaar
Anru aalilaiyil thuyinra pemmaanum en aiyanume.
ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டமெல்லாம்
உய்ய, அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும், கொண்டுசென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத் தாய்; இதுவோ, உன்றன் மெய்யருளே.
Aiyan alanthabadi iru naazhigontu, antamellaam
Uyya, aramseyum unnaiyum porri, oruvar thampaal
Seyya pasunthamizhp paamaalaiyum, kontusenru, poyyum
Meyyum iyampavaidh thaay; idhuvo, unran meyyarule.
அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல் லாள்; தகை சேர்நயனக்
கருணாம் புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்
சரணாம் புயமும் அல் லால் கண்டி லேன்ஒரு தஞ்சமுமே
Arunaam puyadhthum, en sidhthaam puyadhthum amarnthirugkum
Tharunaam puyamulaidh thaiyal nal laal; thagai sernayanag
Karunaam puyamum, vadhanaampuyamum, karaampuyamum
Saranaam puyamum al laal kanti lenoru thanjsamume
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்றுஉன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்: ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அல ராகிநின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடி யார் அடி யார் பெற்ற பாலரையே.
Thanjsam piridhu illai eedhu alladhu, enruun thavanerigke
Nenjsam payila ninaigkinrilen: orrai neel silaiyum
Anjsu ampum igku ala raagininraay; ariyaar eninum
Panjsu anjsum melladi yaar adi yaar perra paalaraiye.
பாலினும் சொல் இனியாய்!பனி மாமலர்ப் பாதம்வைக்க,
மாலினும் தேவர் வணங்கநின் றோன் கொன்றை வார்சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம்ஒரு
நாலினும்,சாலநன் றோ?அடி யேன்முடை நாய்த்தலையே.
Paalinum sol iniyaay!pani maamalarp paadhamvaigka,
Maalinum thevar vanangkanin ron konrai vaarsadaiyin
Melinum, keezhninru vedhangkal paadum meyppeedamoru
Naalinum,saalanan ro?adi yenmudai naaytthalaiye.
நாயேனையும் இங்கு ஒரு பொரு ளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டுகொண் டாய்; நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந் தாய்; என்ன பேறுபெற்றேன்!
தாயே,மலைமகளே, செங்கண் மால்திருத் தங்கைச்சியே!
Naayenaiyum ingku oru poru laaga nayanthu vanthu,
Neeye ninaivinri aantugon taay; ninnai ulla vannam
Peyen ariyum arivudhan thaay; enna peruberren!
Thaaye,malaimagale, sengkan maalthirudh thangkaissiye!
தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட் கரிஉரி போர்த்த செஞ் சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும்,எப்போதும்என்சிந்தையதே
Thangkas silaigontu, thaanavar mubpuram saaytthu, madha
Vengkad kariuri porttha senj sevagan meyyadaiyag
Kongkaig kurumpaig kuriyidta naayagi, koganagas
Sengkaig karumpum, malarum,ebpodhumensinthaiyadhe
தேறும் படிசில ஏதுவுங் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய்இருப்பது அறிந்திருந்தும்,
வேறும் சமயம்உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.
Therum padisila edhuvung kaadti, mun selkadhigkug
Koorum porul, kunril kodtum tharigurigkum; samayam
Aarum thalaivi ivalaayirubpadhu arinthirunthum,
Verum samayamuntu enru kontaadiya veenarugke.
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று, அன்புமிக்க
பூணேன்; உனக்குஅன்புபூண்டுகொண்டேன் ; நின்புகழ்ச்சிஅன்றிப்
பேணேன்; ஒருபொழுதும்; திருமேனிப்ரகாசம் அன்றிக்
காணேன்,இருநிலமும்,திசை நான்கும் ககனமுமே.
Veene paligavar theyvangkal paarsenru, anpumigka
Poonen; unagkuanpuboontugonten ; ninpugazhssianrib
Penen; orubozhudhum; thirumenibragaasam anrig
Kaanen,irunilamum,thisai naankum kaganamume.
ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம்முன்செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்,செம்
முகனும், முந் நான்குஇருமூன் றுஎனத்தோன்றியமூதறிவின்
மகனும்உண் டாயதன் றோ?வல்லி நீ செய்த வல்லபமே.
Kaganamum vaanum puvanamum kaana, vir kaaman angkam
Thaganammunseytha thavabperu maarkudh thadagkaiyum,sem
Muganum, mun naankuirumoon ruenadhthonriyamoodharivin
Maganumun taayadhan ro?valli nee seytha vallabame.
வல்லபம் ஒன்று அறியேன்,சிறியேன்; நின்மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று, ஒன்றிலேன்; பசும்பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்!வினை யேன்தொடுத்த
சொல்அவ மாயினும்,நின்திரு நாமங்கள் தோத்திரமே.
Vallabam onru ariyen,siriyen; ninmalaradissem
Pallavam alladhu parru, onrilen; pasumporporubpu
Villavar thammudan veerrirub paay!vinai yenthodudhtha
Solava maayinum,ninthiru naamangkal thodhthirame.
தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும்நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில்வை யாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம் குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குஉழ லாநிற்பர் பார்எங்குமே.
Thodhthiram seythu, thozhudhu, min polumnin thorramoru
Maadhthiraib podhum manadhthilvai yaadhavar vanmai, kulam
Kodhthiram, kalvi, kunam kunri, naalum kudilkal thorum
Paadhthiram kontu paligkuuzha laanirpar paarengkume.
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறுஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவம்உடை யார்படை யாத தனம் இல்லையே
Paarum, punalum, kanalum, veng kaalum, padarvisumpum,
Oorum murugu suvaioli ooruoli onrubadas
Serum thalaivi, sivagaama sunthari, seeradigke
Saarum thavamudai yaarpadai yaadha thanam illaiye
தனம்தரும், கல்விதரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம்தரும், தெய்வ வடிவும்தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும், நல்லன எல்லாம்தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே.
Thanamtharum, kalvidharum, orunaalum thalarvu ariyaa
Manamtharum, theyva vadivumtharum, nenjsil vanjsamillaa
Inam tharum, nallana ellaamtharum, anpar enpavarkke
Kanam tharum poong kuzhalaal abiraami kadaigkankale.
கண்களிக் கும்படி கண்டுகொண் டேன்; கடம் பாடவியில்
பண்களிக் கும்குரல் வீணையும்,கையும்,பயோ தரமும்,
மண்களிக் கும்பச்சை வண்ணமு மாகி,மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன்பேர்அழகே.
Kankalig kumpadi kantugon ten; kadam paadaviyil
Pankalig kumkural veenaiyum,kaiyum,payo tharamum,
Mankalig kumpassai vannamu maagi,madhangkarkulab
Penkalil thonriya emperumaadti thanperazhage.
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி,அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்,பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்புஇருக்க,
இழவுற்று நின்றநெஞ்சே!இரங்கேல்,உனக்குஎன்குறையே?
Azhagugku oruvarum ovvaadha valli,arumaraigal
Pazhagis sivantha padhaampuyadh thaal,pani maa madhiyin
Kuzhavidh thirumudig komala yaamalaig kompuirugka,
Izhavurru ninranenjse!irangkel,unagkuenkuraiye?
என்குறை தீரநின்று ஏத்துகின் றேன்; இனி யான்பிறக்கின்,
நின்குறையேஅன்றி, யார்குறை காண்? இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்!
தன்குறை தீர, எங் கோன்சடை மேல்வைத்த தாமரையே.
Enkurai theeraninru edhthugin ren; ini yaanpiragkin,
Ninkuraiyeanri, yaarkurai kaan? iru neelvisumpin
Minkurai kaadti meliginra neridai melliyalaay!
Thankurai theera, eng konsadai melvaidhtha thaamaraiye.
தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக்கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும்பொழுது, எமக்கு என்றுவைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளிசெம்மை; அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
Thaamam kadampu, padaibanjsa paanam, thanugkarumpu,
Yaamam vayiravar edhthumpozhudhu, emagku enruvaidhtha
Semam thiruvadi, sengkaigal naanku, olisemmai; ammai
Naamam thiriburai, onrodu irantu nayanangkale.
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயன்என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொற்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
Nayanangkal moonrudai naadhanum, vedhamum, naarananum
Ayanum paravum abiraama valli adiyinaiyaib
Payanenru kontavar, paavaiyar aadavum paadavum, por
Sayanam porunthu thamaniyag kaavinil thangkuvare.
தங்குவர், கற்பக தாருவின் நீழலில்; தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்,
பொங்குஉவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்தஉந்திக்
கொங்குஇவர் பூங்குழ லாள் திருமேனி குறித்தவரே.
Thangkuvar, karpaga thaaruvin neezhalil; thaayar inri
Mangkuvar, mannil vazhuvaab piraviyai; maalvaraiyum,
Pongkuuvar aazhiyum, eerezh puvanamum, poodhthaunthig
Kongkuivar poongkuzha laal thirumeni kuridhthavare.
குறித்தேன் மனத்தில்,நின் கோலமெல்லாம்;நின்குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி;வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றைவேணிப்பிரான்ஒருகூற்றை மெய்யில்
பறித்தே,குடிபுகு தும் பஞ்ச பாண பயிரவியே.
Kuridhthen manadhthil,nin kolamellaam;ninkuribpu arinthu
Maridhthen marali varuginra nervazhi;vantuginti
Veridhthen avizhkonraivenibpiraanorugoorrai meyyil
Paridhthe,kudibugu thum panjsa paana payiraviye.
பயிரவி, பஞ்சமி,பாசாங் குசை, பஞ்ச பாணி,வஞ்சர்
உயிர் அவி உண்ணும்உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி,வராகி-என்றே
செயிர் அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.
Payiravi, panjsami,paasaang kusai, panjsa paani,vanjsar
Uyir avi unnumuyarsanti, kaali olirumkalaa
Vayiravi, mantali, maalini, sooli,varaagi-enre
Seyir avi naanmarai serthiru naamangkal sebpuvare.
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதிவைத் தேன்என் துணைவழிக்கே.
Sebpum kanaga kalasamum polum thirumulaimel
Abpum kalaba abiraama valli, anidharalag
Kobpum, vayirag kuzhaiyum, vizhiyin kozhungkadaiyum,
Thubpum nilavum ezhudhivaidh thenen thunaivazhigke.
விழிக்கே அருள்உண்டு, அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டுஎமக்கு; அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து; பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டுஇனியே!
Vizhigke aruluntu, abiraamavalligku; vedham sonna
Vazhigke vazhibada nenjsu untuemagku; av vazhigidagkab
Pazhigke suzhanru, vem paavangkale seythu; paazhnaragag
Kuzhigke azhunthum kayavar thammodu enna koodtuiniye!
கூட்டிய வா என்னைத் தன் அடி யாரில், கொடியவினை
ஓட்டிய வா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டிய வா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின் றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
Koodtiya vaa ennaidh than adi yaaril, kodiyavinai
Odtiya vaa, enkan odiyavaa, thannai ullavannam
Kaadtiya vaa, kanta kannum manamum kaligkin ravaa,
Aadtiyavaa nadam aadagadh thaamarai aaranangke.
அணங்கே! அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகி லேன்; நெஞ்சில், வஞ்சகரோ(டு)
இணங்கேன்; எனது உனது என்றிருப்பார்சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவொன்றிலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே
Anangke! anangkugal ninpari vaarangkal aagaiyinaal
Vanangken; oruvarai vaazhtthugi len; nenjsil, vanjsagaro(tu)
Inangken; enadhu unadhu enrirubpaarsilar yaavarodum
Pinangken, arivonrilen, enkan nee vaidhthaber aliye
அளியார் கமலத்தில் ஆரணங் கே! அகி லாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும்,
களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின், எங்ஙனேமறப்பேன், நின்விரகினையே:
Aliyaar kamaladhthil aaranang ke! agi laantamum nin
Oliyaaga ninra olirthiru meniyai ulludhorum,
Kaliyaagi, anthag karanangkal vimmig karaiburantu
Veliyaay vidin, engnganemarabpen, ninviraginaiye:
விரவும் புதுமலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல் லார், இமை யோர்எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.
Viravum pudhumalar idtu, nin paadha viraigkamalam
Iravum pagalum irainjsaval laar, imai yorevarum
Paravum padhamum, ayiraavadhamum, pageeradhiyum
Uravum kulisamum, karpagag kaavum udaiyavare.
உடையாளை, ஒல்குசெம் பட்டுடை யாளை, ஒளிர்மதிச்செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளைத், தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மா னிடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களை யும்படை யாவண்ணம் பார்த்திருமே.
Udaiyaalai, olkusem padtudai yaalai, olirmadhissenj
Sadaiyaalai, vanjsagar nenjsu adaiyaalaidh, thayangku nunnool
Idaiyaalai, engkal pemmaa nidaiyaalai, ingku ennai inib
Padaiyaalai, ungkalai yumpadai yaavannam paartthirume.
பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும், பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரை யாள் திருமேனியும், சிற்றிடையும்
வார்க் குங்கும முலை யும், முலை மேல்முத்து மாலையுமே.
Paarkkum thisaidhorum paasaang kusamum, panissiraivantu
Aarkkum pudhumalar ainthum, karumpum, en allal ellaam
Theerkkum thiriburai yaal thirumeniyum, sirridaiyum
Vaark kungkuma mulai yum, mulai melmudhthu maalaiyume.
மால்அயன் தேட, மறைதேட, வானவர் தேடநின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு-கதித்தகப்பு
வேலைவெங் காலன் என் மேல்விடும்போது, வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே.
Maalayan theda, maraidheda, vaanavar thedaninra
Kaalaiyum, soodagag kaiyaiyum, kontu-kadhidhthagabpu
Velaiveng kaalan en melvidumpodhu, velinilkantaay
Paalaiyum thenaiyum paagaiyum polum panimozhiye.
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி, என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற தால்; விழி யால்மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை, அண்டமெல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம்கொண்டு ஆளும் பராபரையே.
Mozhigkum ninaivugkum edtaadha ninthiru moortthi, enran
Vizhigkum vinaigkum velininra thaal; vizhi yaalmadhanai
Azhigkum thalaivar azhiyaa viradhadhthai, antamellaam
Pazhigkumpadi, oru paagamkontu aalum paraabaraiye.
பரம் என்றுஉனை அடைந்தேன்: தமி யேனும்உன் பத்தருக்குள்
தரம்அன்று இவன்,என்று தள்ளத் தகாது; தரியலர்தம்
புரம்அன்று எரியப் பொருப்பு வில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற,கை யான்இடப் பாகம்சிறந்தவளே.
Param enruunai adainthen: thami yenumun padhtharugkul
Tharamanru ivan,enru thalladh thagaadhu; thariyalartham
Puramanru eriyab porubpu vil vaangkiya, podhil ayan
Siram onru serra,kai yaanidab paagamsiranthavale.
சிறக்கும் கமலத் திருவே!நின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும், துரியம்அற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என்முன்னேவரல் வேண்டும் வருந்தியுமே.
Siragkum kamaladh thiruve!nin sevadi sennivaigkadh
Thuragkam tharumnin thunaivarum neeyum, thuriyamarra
Uragkam tharavanthu, udampodu uyiruravu arru arivu
Maragkum pozhudhu enmunnevaral ventum varunthiyume.
வருந்தா வகை என்மனத்தா மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
பொருந்தாதது ஒருபொருள் இல்லை; விண் மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலைமருந்தா னதைநல்கும் மெல்லியலே!
Varunthaa vagai enmanadhthaa maraiyinil vanthubugunthu
Irunthaal, pazhaiya irubpidamaaga, ini enagkub
Porunthaadhadhu oruborul illai; vin mevum pulavarugku
Virunthaaga, velaimarunthaa nadhainalkum melliyale!
மெல்லிய நுண்ணிடை மின்னனை யாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன்னனை யாளைப், புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம்,தொழும்அடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்துஎழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.
Melliya nunnidai minnanai yaalai virisadaiyon
Pulliya menmulaib ponnanai yaalaib, pugazhnthumarai
Solliya vannam,thozhumadi yaaraidh thozhumavarkkub
Palliyam aartthuezha venpagadu oorum padhamtharume.
பதத்தே உருகி,நின் பாதத்திலே மனம்பற்றி, உன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்,இனி யான்ஒருவர்,
மதத்தே மதிமயங் கேன்,அவர் போனவழியும் செல்லேன்,
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.
Padhadhthe urugi,nin paadhadhthile manamparri, unran
Idhadhthe ozhuga adimaigontaay,ini yaanoruvar,
Madhadhthe madhimayang ken,avar ponavazhiyum sellen,
Mudhalthevar moovarum yaavarum porrum mugizhnagaiye.
நகையே இஃது; இந்த ஞாலமெல் லாம்பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ்முலை; மானே, முதுகண்; முடிவில்;அந்த
வகையே பிறவியும்; வம்பே மலைமகள் என்பதும்;நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.
Nagaiye ihdhu; intha njaalamel laamperra naayagigku,
Mugaiye mugizhmulai; maane, mudhugan; mudivil;antha
Vagaiye piraviyum; vampe malaimagal enpadhum;naam
Migaiye ivalthan thagaimaiyai naadi virumpuvadhe.
விரும்பித் தொழும்அடி யார்விழி நீர்மல்கி, மெய்புளகம்
அரும்பித் ததும்பி ஆனந்த மாகி, அறிவிழந்து
கரும்பிற் களித்து, மொழிதடுமாறி, முன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவர்என்றால் அபிராமி சமயம்நன்றே.
Virumpidh thozhumadi yaarvizhi neermalki, meypulagam
Arumpidh thadhumpi aanantha maagi, arivizhanthu
Karumpir kalidhthu, mozhidhadumaari, mun sonnaellaam
Tharumpidhthar aavarenraal abiraami samayamnanre.
நன்றே வருகினும், தீதே விளைகினும்,நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்;எனக்கு உள்ளமெல்லாம்
அன்றே உனதென்று அளித்துவிட்டேன்; அழி யாதகுணக்
குன்றே,அருட்கடலே,இம வான்பெற்ற கோமளமே
Nanre varuginum, theedhe vilaiginum,naan arivadhu
Onreyum illai; unagke param;enagku ullamellaam
Anre unadhenru alidhthuvidten; azhi yaadhagunag
Kunre,arudkadale,ima vaanperra komalame
கோமள வல்லியை, அல்லியந் தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை, ஏதமி லாளை, எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத், தம்மால்
ஆமள வும்தொழு வார்,எழு பாருக்கும் ஆதிபரே.
Komala valliyai, alliyan thaamaraig koyilvaigum
Yaamala valliyai, edhami laalai, ezhudhariya
Saamala menis sagala kalaamayil thannaidh, thammaal
Aamala vumthozhu vaar,ezhu paarugkum aadhibare.
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன் அமரர் தங்கோன்,
போதிற் பிரமன், புராரி முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.
Aadhidhthan, ampuli, angki, kuberan amarar thangkon,
Podhir piraman, puraari muraari, podhiyamuni,
Kaadhib porubadaig kanthan, kanabadhi, kaamanmudhal
Saadhidhtha punniyar ennilar porruvar thaiyalaiye.
தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல் லால், ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சிற் புகல்அறி யாமடப் பூங்குயிலே.
Thaivanthu nin adidh thaamarai soodiya sangkararkug
Kaivantha theeyum, thalai vantha aarum, karanthadhu engke?
Meyvantha nenjsin al laal, orugaalum viragarthangkal
Poyvantha nenjsir pugalari yaamadab poongkuyile.
குயிலாய் இருக்கும் கடம்பா டவியிடை; கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை; வந்துஉதித்த
வெயிலாய் இருக்கும் விசும்புல்; கமலத்தின் மீதுஅன்ன மாம்:
கயிலாய ருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.
Kuyilaay irugkum kadampaa taviyidai; kolaviyan
Mayilaay irugkum imayaa saladhthidai; vanthuudhidhtha
Veyilaay irugkum visumpul; kamaladhthin meedhuanna maam:
Kayilaaya rugku anru imavaan alidhtha kanangkuzhaiye.
குழையத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்புவில்லும்,
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும், வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும் நெஞ்சிலெப் போதும் உதிக்கின்றனவே.
Kuzhaiyadh thazhuviya konraiyan thaarkamazh kongkaivalli
Kazhaiyaib porudha thirunedun tholum, karubpuvillum,
Vizhaiyab porudhiral veriyam paanamum, vennagaiyum,
Uzhaiyab porugannum nenjsileb podhum udhigkinranave.